கோவை வடக்கு: கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்; குப்பைகள் தேக்கத்தால் மக்கள் அவதி
கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன.