உத்தமபாளையம்: ஓடைப்பட்டி அரசு பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற குழந்தைகள் தின விழா
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்றார். மாணவர்களுக்கு கேக் வழங்கியும், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.