தேனி: தேனியில் அனுமதி இன்றி விநாயகர் சிலை ஊர்வலம்: தர்ணா போராட்டம்
Theni, Theni | Sep 14, 2026 தேனியில் அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து மக்கள் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிலை முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.