திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது புகார்
வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல்லில் SFI, DYFI மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.