புதுக்கோட்டை: வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது!
புதுக்கோட்டையில் முன்விரோதம் மற்றும் சொத்துப் பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.