பெரம்பலூர்: பெரம்பலூரில் திமுக பிரமுகர் கைது: காவல் நிலையத்தில் தள்ளுமுள்ளு - பரபரப்பு சம்பவம்!
பெரம்பலூரில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திய புகாரில் திமுக நிர்வாகி கே.சி.ஆர். குமார் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.