இராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு நீதிமன்ற காவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு, வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.