முத்தழகுப்பட்டி, அகஸ்தியர்தெப்பம் அருகே உள்ள முட்புதரில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். சுற்றி வளைத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முத்தழகுபட்டியை சேர்ந்த பிரவீன்ஆல்பர்ட், நவீன்ரெனால்டோ என்றும் அவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி செய்ய சதி திட்டம் தீட்டி கொண்டிருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.