குடியாத்தம்: வேலூர் குடியாத்தம்: மழையால் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய நீர் - வாகன ஓட்டிகள் அவதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம், மேல் ஆலத்தூர் ரயில்வே தரைப்பாலத்தில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கூடநகரம், கொத்தகுப்பம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேங்கிய நீரை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.