பண்ருட்டி: பண்ருட்டி காந்திரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தேமுதிக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஹஜரத் நூர் முகமது ஷா அவுலியா தர்காவில் நாள்தோறும் தொழுகையில் நடைபெறுவது வழக்கம்.அதன்படி நோன்பு தொழுகை முடிந்தவுடன் அதிமுக கூட்டணி கடலூர் பாராளுமன்ற வேட்பாளர் சிவகொழுந்தை ஆதரித்து இஸ்லாமிய மக்களிடம் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துண்டு பிரசுரங்களை வழங்கி முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கூறியும் தீவிர வாக்கு சேகரித்தார்