பண்ருட்டி: தமிழ் குச்சிபாளையம் பகுதியில் மரத்தின் பொந்து ஒன்றில் இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடிபட்டது
நெல்லிக்குப்பம் அடுத்த தமிழ் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் மரம் ஒன்று உள்ளது.இந்த மரத்தில் பறவைகளின் முட்டைகளை பாம்பு ஒன்று தின்ற நிலையில், உடனடியாக பாம்பு பிடி வீரர் உமர் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பெயரில் விரைந்து வந்த அவர் மரத்தின் பொந்தில் இருந்த பாம்பினை சுமார் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பிடித்தார் பின்னர் பிடிபட்ட அந்த பாம்பு சும்மா இருங்க சாரைப்பாம்பு என்பது தெரிய வந்தது