பண்ருட்டி: நெல்லிக்குப்பம் கல்கி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தோட்டத்து பகுதியில் இருந்த சுமார் 4 அடி நீளம் உள்ள தண்ணீர் பாம்பு பிடிபட்டது
நெல்லிக்குப்பம் அடுத்த கல்கி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு பெண்மணி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரர் உமர் அலிக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற அவர்,வீட்டு தோட்டத்து பகுதியில் இருந்த சுமார் 4 அடி நீளம் உள்ள தண்ணீர் பாம்பினை 15 நிமிடப் போராடி பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பினை பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவித்தார்