ஆவுடையார் கோவில்: பாண்டி பத்திரம் கிராமத்தில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் அம்மனுக்கு கஞ்சிவார் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் அம்மனுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் கஞ்சி மார்புகளை தலையில் சுமந்தும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.