ஆவுடையார் கோவில்: பொன்னமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரகுபதி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாக கருதப்படுகிறது.இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றன.சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.அனைவருக்கும் விழா குழுவினர் அன்னதான உணவு வழங்கினர்.