திருவண்ணாமலை: கிரிக்கெட் போட்டியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
திருவண்ணாமலை காவலர் குடியிருப்பு மைதானத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், குடிநீர் மற்றும் அமரும் வசதி இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதைச் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.