இராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 3 இலங்கையர்கள் கைது: லண்டன் செல்ல திட்டமிட்டது அம்பலம்
ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையில் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த 3 இலங்கை நாட்டினரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் மூலம் டெல்லி வழியாக லண்டன் செல்லத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.