இராமநாதபுரம்: மண்டபம் கலைஞர் நகரில் தேங்கிய மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கலைஞர் நகரில் கனமழையால் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடிகால் வசதியைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.