தென்காசி: கேரள கழிவுகளால் அதிரும் தென்காசி! விவசாய நிலத்தில் குவியும் மருத்துவ கழிவுகள்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகள் விவசாய நிலங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.