பெரம்பலூர்: பெரம்பலூரில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விற்பனை: சிலைகள் மற்றும் பூக்களுக்கு மக்கள் ஆர்வம்
பெரம்பலூர் கடைவீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. 100 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலான சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், பூக்கள், பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.