காட்பாடி: காட்பாடியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு பிரம்மாண்ட சமுதாய வளைகாப்பு விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. MLA டாக்டர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தாய்மார்களுக்குச் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு, கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.