அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 10 நாள் ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் கொடியை ஏற்றி வைத்தார். விழா நிறைவாக வரும் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த் திருப்பலி மற்றும் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடைபெற உள்ளது.