பழனி: தவெக நிர்வாகியின் தாயார் மீது தாக்குதல் - ஒருவர் கைது!
பழனி அருகே தொப்பம்பட்டியில் தவெக நிர்வாகியின் தாயார் சலாமத் நிஷாவைத் தாக்கியதாக சபரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தவெகவினர் மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.