பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புள்ளிமானை வேட்டையாடிய 2 பேர் கைது: 66 கிலோ இறைச்சி பறிமுதல்
பெரம்பலூர் அருகே புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை விற்பனைக்கு கொண்டு சென்ற கண்ணன், சத்தியசீலன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 66 கிலோ மான் இறைச்சி மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஆகியவை குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.