விழுப்புரம் பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோயிலில் அதிசயம்! திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பழமையான கிணறு!
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடந்தது என்ன?
கோயிலில் வைப்பதற்காக 1,000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கருங்கல் ஸ்ரீ நந்திகேஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை நிறுவுவதற்காகக் கோயிலின் முன்பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்பொழுது, நிலத்தடிப் பகுதியில் புதைந்திருந்த பழமையான ஆழ்க்கிணறு ஒன்று கண்டறியப்பட்டது!
கோயில் திருப்பணியின் போது இத்தகைய பழமையான கிணறு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது!
#Villupuram #PasupatheeswararTemple #Panchamadevi #TempleRenovation #VillupuramNews #TNNews #AncientTemple #BreakingNews
Viluppuram, Viluppuram | Jul 29, 2026