பழனி: பழனி கோயிலில் அலைமோதும் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
காந்தி ஜெயந்தி மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.