பண்ருட்டி: வாழப்பட்டு அருகே பேருந்தின் குறுக்கே வந்த நபர் பேருந்து மோதி உயிரிழப்பு - CCTV காட்சிகள் வெளியீடு
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் திருஞானம். இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இரு தினங்களுக்கு முன்பு இவர் வாழப்பட்டு பகுதியில் பேரனை, பள்ளியில் விட்டுவிட்டு, நெல்லிக்குப்பத்துக்கு திரும்பிய போது அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து விபத்து அந்த தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.