வேலூர்: ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
வேலூர் தொரப்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.