குடியாத்தம்: குடியாத்தத்தில் 1.5 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் அதிரடி கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.