கோவை வடக்கு: மருதமலை கோவிலில் தொடங்கிய கந்த சஷ்டி விரதம்: விழாக்கோலம் பூண்டது மலைக்கோவில்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விரதம் இன்று தொடங்கியது. திரளான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். கோவில் வளாகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.