ஓசூர்: ஓசூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை: காவல்நிலையம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டம்
ஓசூர் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், தன்னை மிரட்டிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒருவரை கைது செய்து மற்றவரை தேடி வருகின்றனர்.