தருமபுரி: மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - இரண்டாம் கட்ட பணிகளுக்கு பயிற்சி தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் இரண்டாம் கட்ட பணிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தொடங்கி வைத்தார். ஜனவரி மற்றும் பிப்ரவரி 2027-ல் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.