விருத்தாசலம்: விருத்தாசலம் பாத்திமா தூய அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி- கிறிஸ்தவர்கள் பேரணி
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து எழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி விருத்தாசலம் பாத்திமா தூய அன்னை ஆலயத்தில் திரளானோர் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.