கிள்ளியூர்: கொல்லங்கோடு காவல் நிலையம் முற்றுகை: த.வெ.க. நிர்வாகிகள் கைது எதிர்ப்பால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் கைதானவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தை த.வெ.க.வினர் முற்றுகையிட்டனர். உதவி ஆய்வாளரை மிரட்டியதாக ஜெரோன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.