வேலூர்: வேலூரில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தொடங்கி வைக்க, கல்லூரி மாணவ மாணவிகள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.