அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி நேரில் ஆய்வு
கன்னியாகுமரியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து டிஐஜி திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் ஆய்வு செய்தனர். மணவாளக்குறிச்சி, குளச்சல் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.