பெரம்பலூர்: பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் மௌனப் புரட்சி போராட்டம்: 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் மௌனப் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.