பண்ருட்டி: கும்பகோணம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் ,பண்ருட்டி நகரப் பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுச் சிறப்பு பதிவு முகாம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் முகாமினை துவக்கி வைத்தார். இதில், புதிய காப்பீடு அட்டைக்கான பதிவு, பழைய காப்பீடு அட்டையைப் புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்யும் விதமாக முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுகாதார அலுவலர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் கதிர் காமன், அருள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.