மதுரை கிழக்கு: மதுரையில் தீபாவளி குப்பைகளை அகற்றிய DYFI: 6 ஆண்டுகளாகத் தொடரும் சேவை!
மதுரை விளக்குத்தூண் மற்றும் நான்கு மாசி வீதிகளில் தீபாவளிக்குப்பின் குவிந்த குப்பைகளை DYFI அமைப்பினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து அகற்றினர். கடந்த 6 ஆண்டுகளாக இச்சேவையைத் தொடர்ந்து செய்து வரும் அவர்கள், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.