கள்ளக்குறிச்சி: "அஜித் குமார் வீட்டிற்கு சென்ற விஜய், கவின் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை" - மந்தைவெளியில் MLA சிந்தனைசெல்வன் கேள்வி
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்ட மேடையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்போம் பெருந்திரள் பேரணி தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.