ஆவுடையார் கோவில்: அரசு மருத்துவமனை முழு நேரமாக இயங்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் கடைவீதியில் ஆவுடையார் கோவிலில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை முழு நேரமாக இயங்க வேண்டும் ,இரவு நேர மருத்துவர்கள் அமர்த்த வேண்டும், எக்ஸ்ரே மெஷின் புதிதாக மாற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன