ஆவுடையார் கோவில்: பாண்டிபத்திரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வில் பெண்கள் கும்மி அடித்து கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பாண்டி பத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.இன்று இரவு நடைபெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் கும்மி அடித்து குதூகலத்துடன் நிகழ்வில் பங்கேற்றனர்.