எழும்பூர்: உச்ச நீதிமன்றம் பெயரில் பொய்? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரிக்கை!
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில், படிவம் 6 தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் குறித்து தேர்தல் ஆணையம் தவறான தகவலை பரப்பியதாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன.