செங்கம்: திருவண்ணாமலை: குடிநீர் குழாய் மின்வயர்களை அறுத்து அட்டூழியம் - பொதுமக்கள் கோரிக்கை
செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் குடிநீர் குழாய் மின்வயர்களை அறுத்து மின்மீட்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.