ராசிபுரம்: ராசிபுரத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல்: 3 வாகனங்கள் பறிமுதல், ஓட்டுநர் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய 3 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஓட்டுநர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.