செங்கல்பட்டு: மறைமலை நகராட்சி: இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தீவிரம்
மறைமலை நகராட்சியில் ரூ.1.75 கோடி செலவில் இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதன் மூலம் தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வரும் 30-ஆம் தேதிக்குள் பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.