திருவாடனை: திருவாடானையில் விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்: ரூ.30 முதல் தொடக்கம்!
நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவாடானை சந்தை பகுதிகளில் ரூ.30 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.