செங்கல்பட்டு: சூணாம்பேடு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் அவதி
சூணாம்பேடு பேருந்து நிலையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.