ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோயில்: கம்பம் நடும் விழாவில் திரண்ட பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஐப்பசி திருத்தேர் விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா நடைபெற்றது. அக்டோபர் 20-ல் தொடங்கிய திருவிழாவில், நேற்று இரவு சிறப்பு பூஜைகளுடன் கம்பம் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.