பெரம்பலூர்: விவசாயத்தில் சாதனை படைக்கும் நரிக்குறவர் சமூக பெண்கள்
பெரம்பலூர் பாண்டகப்பாடி கிராமத்தில், 'மண்ணின் மகள்' திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற நரிக்குறவர் சமூகப் பெண்களுக்கு, RPM பெண்கள் நலச் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அந்தப் பெண்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.