தருமபுரி: 1.44 லட்சம் பேருக்கு குழந்தைகள் தின வாழ்த்து - கேக் வழங்கி ஆட்சியர் கொண்டாட்டம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1,390 பள்ளிகளில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 379 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் சரவணன் மாணவர்களிடம் 100 சதவீத தேர்ச்சியை அடைய வலியுறுத்தினார்.